என் மலர்

  சினிமா

  ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தினாரா கமல்? போலீசில் வக்கீல் பரபரப்பு புகார்
  X

  ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தினாரா கமல்? போலீசில் வக்கீல் பரபரப்பு புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை மறைமுகமாக நடிகர் கமல்ஹாசன் கொச்சைப்படுத்துவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. #Kamal #BiggBoss
  தனியார் தொலைக்காட்சியில் சில வாரங்களுக்கு முன் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், முதலாவது சீசன் அளவிற்கு, இந்த சீசனில் சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர். 

  ரசிகர்களை கவர பல சுவாரஸ்யமான விஷயங்களை செய்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில், போட்டியாளர்களில் ஒருவர் சர்வதிகாரி போல நடந்து கொள்ள வேண்டும். அந்த டாஸ்க்கில், "தமிழகத்தில் கடந்த காலங்களில் சர்வாதிகாரியால் என்ன நடந்தது தெரியாது" என சக போட்டியாளர் கூறுவதாக அமைந்துள்ளது.

  இதையடுத்து, இந்த டாஸ்க், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியின் விளம்பரத்திற்காக இதுபோன்று ஜெயலலிதாவை விமர்சனம் செய்வதாகவும், சென்னையைச் சேர்ந்த லூயிசாள் ரமேஷ் என்ற வழக்கறிஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  அந்த புகாரில், ‘''நான் 27 ஆண்டுகாலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன். தற்போது பலரும் அரசியல் கட்சி ஆரம்பித்து வருகின்றனர். ஆட்சியைப் பிடிக்க நாங்கள் இவ்வாறு செயல்படுவோம் என்பதற்குப் பதில் அவதூறு செய்வதுதான் அதிகமாக இருக்கிறது.

  பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் வாரந்தோறும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்க்க கட்சி சம்பந்தமாக நிகழ்ச்சியில் பேசுகிறார். ஆனால் இது அவரது கட்சியை வளர்க்க அவர் எடுத்துள்ள யுக்தி.

  ஆனால் அதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை மறைமுகமாக கொச்சைப்படுத்தி வருகிறார். தற்போது இவருடைய ஏற்பாட்டில் சர்வாதிகாரி என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஐஸ்வர்யா என்பவர் பெண் சர்வாதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் பொதுமக்களைக் கொடுமைப்படுத்தும் பல்வேறு செயல்களைச் செய்கிறார்.  இந்த டாஸ்க்கில் என்னென்ன பேச வேண்டும், செய்ய வேண்டும் என கமல்ஹாசனும், தனியார் நிறுவனமும் முடிவு செய்கின்றனர். அதன்படிதான் அவர்கள் பேசுகின்றனர் நடிக்கின்றனர். இதில் ரித்விகா என்பவர் பேசும்போது ஐஸ்வர்யா வட மாநிலப் பெண் அவருக்கு தமிழ்நாட்டில் சர்வாதிகாரி ஆட்சி நடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாது என்று பேசுகிறார்.

  இந்த டாஸ்க் முடிந்தவுடன் வருகிற சனிக்கிழமை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும்போது தமிழகத்தில் சர்வாதிகாரி போல் ஆட்சி நடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்பது போல் பேசுவார். எனவே தமிழகத்தில் அமைதிப் பூங்காவாக ஆட்சி நடத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அவதூறாக சர்வாதிகாரி போல் சித்தரிக்கும் நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிறுவனம் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×