என் மலர்

  சினிமா

  காவிரி விவகாரத்தை வைத்து அனைவரும் அரசியல் செய்கிறார்கள் - சிம்பு ஆவேசம்
  X

  காவிரி விவகாரத்தை வைத்து அனைவரும் அரசியல் செய்கிறார்கள் - சிம்பு ஆவேசம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காவிரி மேலாண்மை அமைக்க போராட்டம் நடத்தும் அனைத்து கட்சிகளும், அரசியல் மட்டும்தான் செய்கிறார்கள் என்று நடிகர் சிம்பு ஆவேசமாக கூறியிருக்கிறார். #STR
  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் மவுனப் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல நடிகர்கள் கலந்துக் கொண்டனர். ஆனால், நடிகர் சிம்பு கலந்துக் கொள்ளவில்லை.

  இந்த போராட்டத்தில் கலந்துக் கொள்ளாததது குறித்து நடிகர் சிம்பு பேசும்போது, ‘காவிரி மேலாண்மை அமைப்பதற்கும், ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கும் நடிகர் சங்கம் சார்பில் இன்று நடைபெற்ற போராட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை. திரைத்துறையில் பல பிரச்சனைகள் இருக்கும்போது, பிற போராட்டங்களில் பங்கேற்பதில் எனக்கு உடன்பாடில்லை.

  ரொம்ப நாளாக தமிழ்நாட்டிற்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்துக் கொண்டிருக்கிறது. அது என்ன என்று பார்த்தால், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு சூனியம் வைத்தது போல் உள்ளது. அவர்களுக்கு என்ன நடந்தது என்று ஆண்டவனுக்குத்தான் தெரியும். அதை முறையாக கண்டுபிடிக்க வேண்டும்.  இங்கு போராட்டம் நடத்துகிற அரசியல்வாதிகள் யாருக்கும் மக்களுக்கு நீர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. அவர்கள் எல்லோரும் அரசியல் செய்கிறார்கள். இதை அரசியலாக்கி ஓட்டாக்க நினைக்கிறார்கள்.
  Next Story
  ×