என் மலர்
முன்னோட்டம்
அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் சிபிராஜ், நிகிலா விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ரங்கா படத்தின் முன்னோட்டம்.
பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கும் படம் `ரங்கா'. சிபிராஜ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு ராம் ஜீவன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு அர்வி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
படம் குறித்து தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா கூறியதாவது: “சிபிராஜ் - நிகிலா விமல் நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்துள்ளது. இயக்குனர் வினோத்தின் யோசனைப்படி, படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி உள்ளனர். முக்கியமான காட்சிகளை, காஷ்மீரில் யாரும் கண்டிராத இடங்களில் படமாக்கி இருப்பதாகவும், உடல் ரீதியாகவும் மிக சிரமப்பட்டோம்.

நிகிலா விமல், சிபிராஜ்
அவலாஞ்சி எனப்படும் பனி புயல் எங்களை மிரட்டியது, துரத்தியது. சற்றும் சளைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு இடையே படப்பிடிப்பை முடித்ததாக கூறினார். காதல் காட்சிகள் மிக சிறப்பாக வந்து உள்ளன. சண்டை இயக்குனர் திலீப் சுப்புராயன் மற்றும் அவருடைய குழுவினர் அந்த பனி பிரதேசத்தையே தங்கள் சண்டை காட்சி அமைப்புகளால் தீப்பிழம்பு ஆக்கினார்கள் என்றால் மிகை ஆகாது” என்றார்.
நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் சாண்டி, சுருதி செல்வம் நடிப்பில் உருவாகி உள்ள ‘மூணு முப்பத்தி மூணு’ படத்தின் முன்னோட்டம்.
பிரபல நடன இயக்குனரான சாண்டி இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘3:33’. டி.ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள இப்படத்தை நம்பிக்கை சந்துரு இயக்கி உள்ளார். இதில் சுருதி, ரமா, ரேஷ்மா, மைம் கோபி, சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நகைச்சுவை கலந்த பேய் படமாக உருவாகியுள்ள இதில் பாடல்கள் இல்லையாம். சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஹர்ஷ்வர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார்.

சாண்டி
படத்தை பற்றி இயக்குனர் நம்பிக்கை சந்துரு கூறியதாவது: வழக்கமான பேய் படங்களை விட முற்றிலும் மாறுபட்டு திக்... திக்... என திகில் கலந்த படம் இது. திக் திக் என காட்சிக்கு காட்சி திகில் அதிகரித்துக்கொண்டே போகும். படத்துக்காக மாங்காடு அருகே ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து, அதை பேய் பங்களாவாக மாற்றினோம். பெரும்பகுதி காட்சிகள் அந்த பங்களாவுக்குள்ளேயே படமாக்கப்பட்டன. படத்தை இயக்கியிருப்பதுடன், டாக்டர் வேடத்தில் நடித்தும் இருக்கிறேன்” என்கிறார்.
இ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் மிதுன், ரித்விகா, வடிவுக்கரசி, ரோகிணி நடிப்பில் உருவாகி வரும் ‘கருவறை’ படத்தின் முன்னோட்டம்.
இ.வி.கணேஷ்பாபு நடித்து டைரக்டு செய்த ‘கட்டில்’ படம் முடிவடைந்து, திரைக்கு வர தயாராக இருக்கிறது. அவர் அடுத்து டைரக்டு செய்த ‘கருவறை’ படமும் முடிவடைந்தது. இது, பொருளாதார பின்னணியில் உருவான நடுத்தர குடும்பங்களை பற்றிய கதை. பெண் குழந்தை கருவை கலைக்கும் சூழல் அதிகமாகி வருவதை சித்தரிக்கும் படம்.
மிதுன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்விகா நடித்துள்ளார். மேலும் வடிவுக்கரசி, ரோகிணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்துள்ளார், இ.வி.கணேஷ்பாபு. படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை.
சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் அகடு படத்தின் முன்னோட்டம்.
சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் அகடு. இதில் சார்பட்டா பரம்பரை புகழ் "டாடி" ஜான் விஜய், அஞ்சலி நாயர், சித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், விஜய் ஆனந்த், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். புதுமுக இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார்.
ஒரு பயணத்தின் போது புதிய நட்புகள் கிடைக்கிறார்கள். அந்த பயணத்தை மறக்க முடியாத பயணமாக மாற்றுகிறார்கள் அந்த புதிய நட்புகள்.நம்மோடு நன்றாக பழகியவர்கள், எதிர் பாராத ஒரு நிமிடத்தில் நம் வாழ்வையே கலைத்துப்போட்டால்...
ஆமாம்... போதை அப்படித்தான். எப்படிப்பட்ட நட்பையும் போதை முறித்துவிடும், எப்படிப்பட்ட உறவையும் போதை அழித்துவிடும். போதையின் மற்றவர்களை அழிப்பதோடு தன்னையும் அழித்துக்கொள்ளவே வழிவகுக்கும் என்பதை அழுத்தம் திருத்தமாக பேச வருகிறது, அகடு.

பாலியல் குற்றங்களுக்கு எதிராக அகடு திரைப்படம் உருவாகி வருகிறது. கொடைக்கானலுக்கு நான்கு இளைஞர்கள் சுற்றுலா செல்கிறார்கள். அங்கு சுற்றுலா வந்த 13 வயது சிறுமிக்கு நான்கு இளைஞர்களால் எதிர்பாராத ஒரு கொடூர செயல் நடைபெறுகிறது. அச்சிறுமிக்கு என்ன நடந்திருக்குமோ என்று எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவராஜ்சிங்காரவேலு,சஞ்சீவ் இணை தயாரிப்பு செய்திருக்கிறார். ஜோகன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சாம்ராட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கபிலன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். படத்தொகுப்பை தியாகு கவனிக்கிறார். அகடு படத்தின் படப்பிடிப்பு முடிந்து இம்மாதம் வெளியாக இருக்கிறது.
கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் சி.பி, தயாரித்து நாயகனாக நடித்திருக்கும் 'கிரிமினல்’ படத்தின் முன்னோட்டம்.
கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் சி.பி, தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் 'கிரிமினல்'. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில், அறிமுக நடிகர்களும், சில முன்னணி நடிகர்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சஸ்பென்ஸ் திரில்லராக அறிமுக இயக்குனர் ஆறுமுகம் இயக்கியிருக்கிறார்.
நாயகனின் அப்பா கொலை செய்யப்பட, அந்த கொலை பழி நாயகன் மீது விழுகிறது. ஒரு பக்கம் போலீஸ் துரத்த, மறுபக்கம் தனது தந்தையை கொலை செய்த உண்மையான கொலையாளியை பிடித்து, தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் முயற்சியில் நாயகன் இறங்குகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சீட் நுனியில் உட்கார்ந்து பார்க்கும் வகையில், சஸ்பென்ஸாகவும், திரில்லராகவும் சொல்லியிருக்கிறார்கள்.
'கிரிமினல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி, தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிரிமினல் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஆப்பிள் - பைனாப்பிள் ஆகிய இருவர் இணைந்து இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கிரண் குமார் டொர்னாலா ஒளிப்பதிவு செய்கிறார். பவன் கவுடா படத்தொகுப்பு செய்ய, மோகன் பி.கேர் கலையை நிர்மாணிக்கிறார். சசி துரை தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்ற, ஹஸ்வத் சரவணன் பி.ஆர்.ஓவாக பணியாற்றுகிறார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள 'கிரிமினல்' படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
எஸ்.டி.புவி இயக்கத்தில் பாரி, கார்த்திகேயன், யோகி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஜயன்’ படத்தின் முன்னோட்டம்.
ஓகே சினிமாஸ் வழங்க சுப்பிரமணிய சக்கரை, செந்திலரசு சுந்தரம், தொல்காப்பிய புவியரசு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் விஜயன். இப்படத்தை எஸ்.டி.புவி இயக்கி இருக்கிறார். இவர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
இப்படத்தில் பாரி, கார்த்திகேயன், யோகி, ஆர்த்தி வினோ, லைலிதா, ஶ்ரீனிதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சங்கர், ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அலிமிர்ஷாக் இசையமைத்துள்ளார். ராஜேந்திரன், திருச்செல்வம் படத் தொகுப்பையும், ச.முருகானந்தம் இணை தயாரிப்பையும் கவனித்திருக்கிறார்கள்.
தலித் அரசியலை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
அறிமுக இயக்குனர் சுந்தரவடிவேல் இயக்கத்தில் பிரசாந்த் சீனிவாசன், பிரசாத் நடிப்பில் தயாராகும் ‘ரீ’ படத்தின் முன்னோட்டம்.
குடும்ப பின்னணியில் சைக்கோ திரில்லராக உருவாகும் படம் ‘ரீ’. அறிமுக இயக்குனர் சுந்தரவடிவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். கதாநாயகர்களாக பிரசாந்த் சீனிவாசன், பிரசாத் ஆகியோரும், கதாநாயகிகளாக காயத்ரி ரெமா, சங்கீதா பால் நடிக்கிறார்கள். பாரதிராஜாவின் உதவியாளர் ராஜேந்திரன் இணை இயக்குனராக பணியாற்றுகிறார்.

ரீ படக்குழு
ஹரி இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். தினேஷ் ஸ்ரீநிவாஸ் ஒளிப்பதிவினை மேற்கொள்கிறார். எடிட்டிங் பணிகளை நவீன் கவனிக்கிறார். ஸ்ரீஅங்கா புரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் "ரீ" திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கத்தில் அபி சரவணன், ஷைனி நடிப்பில் உருவாகி இருக்கும் சாயம் படத்தின் முன்னோட்டம்.
ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. படத்தினை புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார்.
அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, இந்தியா, பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி, இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் மற்றும் பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அபி சரவணன், ஷைனி
நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில், கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி இருக்கும் தள்ளிப்போகாதே படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளிப்போகாதே. இப்படத்தில் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரேமம், கொடி போன்ற படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் வருகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகி இருக்கிறது. கோபி சுந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அனுபமா பரமேஸ்வரன், அதர்வா
இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடித்துள்ளார்கள். எம்.கே.ஆர்.பி. நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை இயக்குனர் கண்ணன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு கபிலன் வைரமுத்து வசனங்களை எழுதி உள்ளார். மேலும் ஸ்டண்ட் மாஸ்டராக சில்வா பணியாற்றியுள்ளார். ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ரிலீசாக உள்ளது.
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் முன்னோட்டம்.
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள இத்திரைப்படத்திற்கு "நாய் சேகர் ரிட்டன்ஸ்" என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். மேலும் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி துரைசாமி இயக்கத்தில் விதார்த், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘என்றாவது ஒரு நாள்’ படத்தின் முன்னோட்டம்.
உண்மை சம்பவங்களின் தொகுப்பாக ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்துக்கு, ‘என்றாவது ஒரு நாள்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார்.
தனது முதல் படம் பற்றி அவர் கூறியதாவது: “உண்மை சம்பவத்தை கருவாக வைத்து வரும் கதைகள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. நிஜ சம்பவங்களை திரைக்கதை என்னும் மாலையாக அழகாக கோர்த்து பல்வேறு இயக்குனர்கள் கதைகளை சொல்லும் விதம் அதிகமாகி வருகிறது.
நாளிதழில் வரும் செய்திகளை படித்து விட்டு எளிதில் கடந்து விடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில், ‘என்றாவது ஒருநாள்’ படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

விதார்த், ரம்யா நம்பீசன்
கால்நடை வளர்ப்பு மற்றும் உலகமயமாக்கல் கொண்டு வந்த இடம் பெயர்வு பற்றிய கதை, இது. குடிநீர் பஞ்சம், குழந்தை தொழிலாளர்கள், நல்ல எதிர்காலத்துக்காக காத்திருக்கும் மக்களின் சவால்களை எல்லாம் காட்சிகளாக்கி, மக்களை சிந்திக்க தூண்டும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. எளிய மக்களும், கால்நடைகளுடனான அவர்களின் உறவும் கதையில் முக்கிய பகுதியாக வைக்கப்பட்டுள்ளது.
நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கும் விதார்த், வித்தியாசமான கதைகளில் மட்டுமே நடிக்கும் ரம்யா நம்பீசன், ‘சேதுபதி’ படத்தில் நடித்த ராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தி தியேட்டர் பீப்பிள் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார்”. இவ்வாறு வெற்றி துரைசாமி கூறினார்.
அறிமுக இயக்குனர் ராஜா சரவணன் இயக்கத்தில் ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘ரவுடி பேபி’ படத்தின் முன்னோட்டம்.
நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘ரவுடி பேபி’. இப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜா சரவணன் இயக்குகிறார். இவர் பல முன்னணி இயக்குனர்களுடன் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ரவுடி பேபி படக்குழு
செல்லதுரை ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். ‘கவிப்பேரரசு’ வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். தீபக் துவாரகநாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.






