search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கையில் சிகரெட்டுடன் ராதிகா.. வைரலாகும் போஸ்டர்
    X

    கையில் சிகரெட்டுடன் ராதிகா.. வைரலாகும் போஸ்டர்

    • நடிகர் விஜய் ஆண்டனி தற்போது நடித்துள்ள படம் 'கொலை'.
    • இப்படத்தை இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார்.

    இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை 'விடியும் முன்' புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்தது.

    கொலை

    இந்நிலையில் கொலை படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் 'தி பாஸ்' என்ற கதாப்பாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளதாக குறிப்பிட்டு ஒரு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ராதிகா கையில் சிகரெட் வைத்திருப்பது போன்று இந்த போஸ்டர் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


    Next Story
    ×