என் மலர்

  சினிமா செய்திகள்

  விக்ரம் படத்தால் அருண் விஜய்க்கு வந்த பிரச்சனை
  X

  அருண் விஜய்

  விக்ரம் படத்தால் அருண் விஜய்க்கு வந்த பிரச்சனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘யானை’.
  • இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

  அருண் விஜய்யின் 33-வது படம் 'யானை'. ஹரி இயக்கத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

  கிராமத்து பின்னணியில் தயாராகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, பழனி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் யானை படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

  யானை

  அந்த பதிவில், விக்ரம் படத்திற்கான உரிய மரியாதையுடன் எங்கள் யானை திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 1-ஆம் தேதிக்கு வெளியிட ஒத்திவைக்கிறோம். சாதனையை முறியடிக்கும் வெற்றிக்கு கமல்ஹாசன் ஐயா மற்றும் லோகேஷ் கனகராஜ்க்கு யானை படக்குழுவின் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு கமலுக்கு பூங்கொத்து வழங்குவது போன்ற புகைப்படத்தை படக்குழு பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


  Next Story
  ×