search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் ஆண்டனி படத்தில் இணைந்த நகுல்
    X

    நகுல்

    விஜய் ஆண்டனி படத்தில் இணைந்த நகுல்

    • இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் மழை பிடிக்காத மனிதன்.
    • இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

    இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் மழை பிடிக்காத மனிதன். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கன்னட நடிகர் பிருத்வி அம்பர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்தப் படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கன்னட நடிகர் பிருத்வி அம்பருக்கு, தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான நகுல் டப்பிங் பேசியுள்ளார்.


    நகுல்

    பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமான நகுல் காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளது.

    Next Story
    ×