search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ராகவா லாரன்சுக்கு கிடைத்த புதிய கவுரவம்.. குவியும் வாழ்த்துக்கள்
    X

    ராகவா லாரன்ஸ்

    ராகவா லாரன்சுக்கு கிடைத்த புதிய கவுரவம்.. குவியும் வாழ்த்துக்கள்

    • நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ்.
    • இவரின் கைவசம் தற்போது ருத்ரன், அதிகாரம் மற்றும் 'சந்திரமுகி 2' படங்கள் உள்ளது.

    தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது ருத்ரன், அதிகாரம் மற்றும் 'சந்திரமுகி 2' படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமூக செயல்களில் ஈடுபாடுடன் இருக்கும் ராகவா லாரன்ஸ், 'லாரன்ஸ் அறக்கட்டளை' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த அறக்கட்டளையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் மருத்துவ செலவுகள் உள்ளிட்ட பல நல உதவி திட்டங்களை செய்து வருகிறார்.


    இந்நிலையில் சமூக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில், ராகவா லாரன்ஸிற்கு சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இது குறித்து ராகவா லாரன்ஸ் சமூக வலைத்தளத்தில் நன்றிக் கூறி பதிவிட்டுள்ளார். அதில், "சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் பெற்றது எனக்கு கிடைத்த பெருமை. இந்த விருதை எனக்கு வழங்கியதற்காக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சிலுக்கு மனமார்ந்த நன்றி. எனது சார்பாக என் அம்மா இந்த விருதினை பெற்றது மிக சிறப்பு" என குறிப்பிட்டுள்ளார்.


    Next Story
    ×