என் மலர்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன்
புதிய படத்தின் பெயரை அறிவித்த சிவகார்த்திகேயன்.. கொண்டாடும் ரசிகர்கள்
- 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய இரண்டு திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்து வெளியான 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 'எஸ்.கே.20' திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
பிரின்ஸ்
இப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ள நிலையில் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்திற்கு 'பிரின்ஸ்' என்று பெயர் வைத்துள்ள படக்குழு, படத்தின் பெயரோடு சேர்த்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Here's the first look of #PRINCE 🇮🇳🕊🇬🇧#PrinceFirstLook@anudeepfilm #MariaRyaboshapka #Sathyaraj sir @MusicThaman @manojdft @premji @Cinemainmygenes @SVCLLP @SureshProdns @ShanthiTalkies @Gopuram_Cinemas #NarayandasNarang @AsianSuniel @SBDaggubati @puskurrammohan @iamarunviswa pic.twitter.com/NbLSADkdv8
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 9, 2022