என் மலர்

  சினிமா செய்திகள்

  ரசிகர்களுக்கு பிரம்மாண்ட இசை விருந்து- இசையமைப்பாளர் அனிருத் திட்டம்
  X

  அனிருத்

  ரசிகர்களுக்கு பிரம்மாண்ட இசை விருந்து- இசையமைப்பாளர் அனிருத் திட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 3, எதிர்நீச்சல், மான் கராத்தே, கத்தி, மாரி, வேதாளம் உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் அனிருத்.
  • தற்போது அனிருத் மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சி விரைவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  தனுஷ் நடிப்பில் 2012-ஆம் ஆண்டு வெளியான 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன்பின்னர் எதிர்நீச்சல், மான் கராத்தே, கத்தி, மாரி, வேதாளம், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

  அனிருத்

  தற்போது இவர் திரைத்துறையில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. தனது 10வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், இசையமைப்பாளர் அனிருத் தனது முதல் இந்திய மியூசிக் கான்செர்ட் நிகழ்வான 'ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார் - ஒன்ஸ் அப்பான் எ டைம் கான்சர்ட்' எனும் நிகழ்ச்சியை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன் இணைந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிகழ்ச்சிகளின் தேதிகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், செப்டம்பர்-அக்டோபர் 2022 மாதங்களில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இந்த மியூசிக் கான்செர்ட் கச்சேரிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  அனிருத்

  கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒரு லைவ்-இன் கச்சேரியாகத் திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் சென்னை நிகழ்ச்சியை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், முழு கச்சேரியும் நேரலையாக ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

  Next Story
  ×