search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கமலுடன் பணிபுரிந்தது குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி.. வைரலாகும் வீடியோ
    X

    கமல் - விக்னேஷ் சிவன்

    கமலுடன் பணிபுரிந்தது குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி.. வைரலாகும் வீடியோ

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சில தினங்களுக்கு முன்பு நடைப்பெற்றது.
    • இதில் திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


    இந்த போட்டிகள் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார். மேலும், கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி, அரசியல் தலைவர்கள் என பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


    இந்தவிழாவில் நடிகர் கமல்ஹாசனின் பின்னணி குரலில் தமிழ்நாட்டின் கலாசார வளர்ச்சி குறித்த நிகழ்த்துக்கலை நடைபெற்றது. 1200 ஆண்டுகளுக்கு முன் மயிலாடும்பாறையில் தமிழர் கலை, கலாசாரம் செழித்து இருந்ததற்கான சான்று முதலாம் நூற்றாண்டில் கரிகால சோழன் கல்லணை கட்டியது குறித்து முப்பரிமாண படத்துடன் கமல் குரலில் விளக்கமளிக்கப்பட்டது.


    இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக கமல்ஹாசனுடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் குழுவினர் கலந்துரையாடும் வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'உலக நாயகனுடன் சில மணி நேரங்கள் செலவழிக்க நேரம் கிடைத்ததை எண்ணி நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய அறிவு, அவர் அளித்த விளக்கங்கள் மற்றும் அவர் எங்களுக்கு கூறிய நுணுக்கங்கள் ஆகியவை எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



    Next Story
    ×