search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இவரை என் வாழ்நாளில் ஒரு முறை தான் பார்த்திருக்கிறேன்.. லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி
    X

    லோகேஷ் கனகராஜ்

    இவரை என் வாழ்நாளில் ஒரு முறை தான் பார்த்திருக்கிறேன்.. லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி

    • மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.
    • இவர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    2017-ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் மூலம் தனக்கான பாதையை உருவாக்கி கமலுடன் பணிபுரிய வாய்ப்பை பெற்றார். கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை இயக்கி இந்திய அளிவில் லோகேஷ் கனகராஜ் பேசப்பட்டார். விக்ரம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.440 கோடி வசூலை கடந்தது.

    இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட லோகேஷ் கனகராஜ் அவரின் வாழ்க்கையில் பத்திரிக்கையாளர்களின் பங்களிப்பு என்ன என்பது குறித்து பேசியுள்ளார். அதில், பாரதிராஜா சாரை என் வாழ்நாளில் ஒரு முறை தான் பார்த்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருடன் அருகில் அமரும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். என்னுடைய முதல் படம் துவங்கி இப்போது 'விக்ரம்' வரையிலும் பத்திரிக்கையாளர்களின் பங்கு என் வாழ்நாளில் நிச்சயம் ஈடு செய்ய முடியாதது.

    இதை மாநகரம் சந்திப்பில் கூட சொல்லியிருந்தேன் இந்த படத்தில் நடித்தவர்கள் பலரையும் மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை பத்திரிக்கையாளர்களான உங்களால் மட்டுமே இந்த படத்தை கொண்டு போய் சரியான முறையில் சேர்க்க முடியும் என தெரிவித்திருந்தேன். அதன்படி பத்திரிகையாளர்கள் எனக்கு கொடுத்த ஆதரவு தான் இன்று இப்போது இந்த இடத்தில் நான் நிற்க காரணம். ஒவ்வொரு கட்டத்திலும் உங்களின் ஆதரவும் உதவியும் சொற்களால் அடக்க முடியாது எப்போது எங்கு நீங்கள் கூப்பிட்டாலும் நான் வர கடமைப்பட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட விழாவில் நான் நிற்பதை பெருமையாக கருதுகிறேன் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

    Next Story
    ×