search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கவுதம் கார்த்திக் -சரத்குமார் கூட்டணியில் உருவாகும் கிரிமினல்.. படப்பிடிப்பு தொடக்கம்..
    X

    கவுதம் கார்த்திக் - சரத்குமார்

    கவுதம் கார்த்திக் -சரத்குமார் கூட்டணியில் உருவாகும் 'கிரிமினல்'.. படப்பிடிப்பு தொடக்கம்..

    • அறிமுக இயக்குனர் தக்‌ஷிண மூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'கிரிமினல்'.
    • இப்படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர்.

    அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை பார்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.


    கிரிமினல் படக்குழு

    இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 23-ஆம் தேதி மதுரையில் தொடங்கியது. 'கிரிமினல்'படம் குறித்து பார்சா பிக்சர்ஸின் தயாரிப்பாளர் பி.ஆர். மீனாக்ஷி சுந்தரம் பேசும்போது, "எங்களுடைய புதிய புராஜெக்ட்டான 'கிரிமினல்' வெற்றிகரமாக மதுரையில் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி. மொத்தப் படத்தையும் ஒரே ஷெட்யூலாக 40 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறோம். இதற்கு முன்பு நடித்திராத தனித்துவமான கதாபாத்திரங்களில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் நடிக்க இருக்கிறார்கள். கவுதம் கார்த்திக் அக்யூஸ்ட்டாக நடிக்க காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடிக்கிறார். பல படங்களில் அவர் ஸ்டைலிஷான காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் இதில் தனித்துவமாகவும் புதிதாகவும் பார்வையளர்களுத் தெரிவார்".

    பிக் பிரிண்ட் பிக்சர்ஸின் தயாரிப்பாளர் ஐ.பி. கார்த்திகேயன் கூறியதாவது, "கிரிமினல்' படத்தின் கதையும், தக்ஷிண மூர்த்தி ராம்குமார் அதைத் திரைக்கதையாக மாற்றியிருக்கக் கூடிய விதமும் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டும் விதமாக அமையும். அவர் கதையை சொன்னபோது, கதையின் பல தருணங்கள் ஒரு அனுபவமிக்க தேர்ந்த இயக்குனர் சொல்வது போல இருந்தது. கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமாரின் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருக்கும். திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த படத்தில் அங்கம் வகிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

    Next Story
    ×