என் மலர்

  சினிமா செய்திகள்

  நடிக்க மறுத்த சிம்பு.. கொண்டாடும் ரசிகர்கள்..
  X

  சிம்பு

  நடிக்க மறுத்த சிம்பு.. கொண்டாடும் ரசிகர்கள்..

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு.
  • வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


  சிம்பு

  இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு "பத்து தல" படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் மதுபான விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

  அதாவது, பன்னாட்டு மதுபான நிறுவனம் ஒன்று தங்கள் விளம்பரத்தில் நடிக்க சிம்புவை அணுகியுள்ளது. இதற்காக பெரிய தொகையை தர முன் வந்தும் சிம்பு இந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து சிம்புவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

  Next Story
  ×