என் மலர்

  சினிமா செய்திகள்

  சர்ப்ரைஸ் கொடுத்த அஜித்.. ஷாக்கான ரசிகர்கள்
  X

  அஜித்

  சர்ப்ரைஸ் கொடுத்த அஜித்.. ஷாக்கான ரசிகர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார்.
  • இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். மேலும், சமுத்திரக்கனி, வீரா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

  அஜித்

  படத்தின் வேலைகள் பெரும்பான்மையாக முடிந்துவிட்ட நிலையில், அஜித் ஐரோப்பா நாடுகளில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் ரசிகர் ஒருவருக்கு அஜித் தொலைப்பேசியில் பிறந்தநாள் வாழ்த்து கூறி அவருக்கு ஆட்டோகிராப் போடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

  அஜித்

  அந்த ஆடியோவில், ரசிகருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய அஜித், "சந்தோசமா இருங்க, ஆரோக்கியமா இருங்க... நேரில் மீட் பண்ணுவோம்" என்று கூறியுள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

  Next Story
  ×