என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திரைப்படமாகும் Peaky Blinders.. அசத்தல் தலைப்புடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு
    X

    திரைப்படமாகும் Peaky Blinders.. அசத்தல் தலைப்புடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    • 1920கள் வரை பர்மிங்காம் நகரில் இயங்கிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' என்ற நிஜமான குற்ற கும்பலை அடிப்படையாகக் கொண்டது.
    • தொடர் முழுவதும் சிலியன் மர்ஃபி, டாமி ஷெல்பி கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார்.

    உலகெங்கிலும் கேங்ஸ்டர் கதைக்கு என்று என்றுமே தனி மவுசு உள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தின் புகழ் பெற்ற கேங்ஸ்டர் கதை பீக்கி 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders). இணைய தொடராக வெளிவந்து வரவேற்பை பெற்ற இதன் 6வது சீசன் 2022 இல் வெளியானது. அடுத்ததாக 2 புதிய சீசன்களுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது.

    இந்த க்ரைம் டிராமா தொடர், 1880கள் முதல் 1920கள் வரை பர்மிங்காம் நகரில் இயங்கிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' என்ற நிஜமான குற்ற கும்பலை அடிப்படையாகக் கொண்டது. தொடர் முழுவதும் சிலியன் மர்ஃபி (Cillian Murphy) டாமி ஷெல்பி கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார். கடந்த 2023 வெளியான கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹைமர் படத்திற்காக சிலியன் மர்ஃபி ஆஸ்கர் விருது வாங்கியது அவரது நடிப்புத்திறனுக்கு சான்று.

    இதற்கிடையே பீக்கி பிளைண்டர்ஸ் தொடரை படமாக தயாரிப்பதாக நெட்பிளிக்ஸ் அறிவித்தது. படத்திலும் சிலியன் மர்ஃபி -யே டாமி ஷெல்பியாக நடிக்கிறார். முதலாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டனில் நடைபெறும் வரலாற்று கதைகளத்துடன் இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது

    இந்நிலையில் இந்த படத்திற்கு "தி இம்மோர்டல் மேன்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் "தி இம்மோர்டல் மேன்" திரைப்படம் மார்ச் 20 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×