search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கேரள சீரியல் நடிகை பாலியல் புகார்: தயாரிப்பாளர்-கட்டுப்பாட்டாளர் மீது வழக்குப்பதிவு
    X

    கேரள சீரியல் நடிகை பாலியல் புகார்: தயாரிப்பாளர்-கட்டுப்பாட்டாளர் மீது வழக்குப்பதிவு

    • மலையாள திரையுலகம் மட்டுமின்றி அனைத்து திரையுலகிலும் புயலை கிளப்பியிருக்கிறது.
    • நடிகைகளை தொடர்ந்து சீரியல் நடிகை பாபியல் புகார்.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி வெட்டவெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

    அந்த அறிக்கை வெளியானதையடுத்து பல நடிகைகளும் தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்கள் குறித்த விவரங்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

    நடிகைகளின் இந்த குற்றச்சாட்டு மலையாள திரையுலகம் மட்டுமின்றி அனைத்து திரையுலகிலும் புயலை கிளப்பியிருக்கிறது.

    பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நடிகைகள் உள்ளிட்டவர்களுக்கு ஆதரவாக ஏராளமான நடிகைகள் மற்றும் நடிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கேரளாவில் சீரியல் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். திருவனந்தபுரத்தை சேர்ந்த அந்த நடிகை, கேரளாவை சேர்ந்த சீரியல் தயாரிப்பாளர் மற்றும் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் மீது திருவனந்தபுரம் அருங்காட்சியகம் போலீசில் பாலியல் புகார் கூறியிருக்கிறார்.

    ஒரு சீரியலில் நடிக்க வைப்பதாக வாக்குறுதி அளித்து, 2018-ம் ஆண்டு கனகாநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து சீரியல் தயாரிப்பாளர் சுதீஷ் சேகர் மற்றும் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் ஷானு ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை புகார் தெரிவித்துள்ளார்.

    அதன்பேரில் சுதீஷ் சேகர் மற்றும் ஷானு ஆகிய இருவரின் மீதும் திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர்களின் மீது 376 (கற்பழிப்பு) சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். திரைப்பட நடிகைகளை தொடர்ந்து, சீரியல் நடிகை ஒருவரும் பாலியல் புகார் கூறியிருப்பது கேரளாவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×