என் மலர்
சினிமா செய்திகள்
அமரன் திரைப்படத்தின் உயிரே வீடியோ பாடல் வெளியானது
- நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.
- சினிமா பிரபலங்கள் பலரும் இப்படக்குழுவை நேரில் அழைத்தும் பாராட்டினர்.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
'அமரன்' படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பை பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் இப்படக்குழுவை நேரில் அழைத்தும் பாராட்டினர்.
திரையரங்குகளில் வெளியாகி மக்களின் பெரும் ஆதரவுடன் வசூலில் சாதனை படைத்த 'அமரன்' அடுத்த மாதம் 5 அல்லது 11-ந்தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் பாடலான உயிரே பாடலின் வீடியோ தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடல் அவர்கள் காதலித்து திருமணம் செய்துக் கொள்ளும் காட்சிகள் அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்