என் மலர்

  சினிமா செய்திகள்

  ஷகானா
  X
  ஷகானா

  நடிகை மர்ம மரணம்.. கணவரிடம் தீவிர விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மலையாள நடிகை கேரளாவில் இன்று வீட்டுக்குள் பிணமாக கிடந்தார், இவரின் கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் ஷகானா (வயது 20).
   மாடல் அழகியான ஷகானா, பின்னர் ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர் சஜ்ஜாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கோழிக்கோட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் ஷகானா அவரது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது கணவர், அறையை திறந்து பார்த்த போது அங்கு ஷகானா, ஜன்னலில் தூக்குபோட்டு பிணமாக கிடந்தார்.

  ஷகானா,
  ஷகானா

  அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி கோழிக்கோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஷகானா இறந்தது பற்றி அவரது உறவினர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள் ஷகானா சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்தனர்.

  ஷகானா
  ஷகானா

  அவரது 20வது வயது பிறந்தநாளை கொண்டாட அனைவரையும் அழைத்திருந்த நிலையில் அவர் தற்கொலை செய்ததாக கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நடிகை ஷகானாவின் கணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×