என் மலர்

  சினிமா செய்திகள்

  மோகன் ஜுனேஜா
  X
  மோகன் ஜுனேஜா

  கே.ஜி.எஃப் பட நடிகர் காலமானார்... திரையுலகினர் அதிர்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் கே.ஜி.எஃப் 2 படத்தில் நடித்த நடிகர் உயிரிழந்துள்ளார்.
  பிரபல கன்னட நடிகர் மோகன் ஜுனேஜா. குணசித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி மெகா ஹிட்டான கே.ஜி.எஃப் சாப்டர் 2 படங்களிலும் இவர் நடித்திருந்தார். சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள மோகன் ஜுனேஜா, சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

  மோகன் ஜுனேஜா

  கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட மோகன் ஜுனேஜா, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. மோகன் ஜுனேஜாவின் மறைவு கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
  Next Story
  ×