என் மலர்

  சினிமா செய்திகள்

  சூர்யா - பாலா
  X
  சூர்யா - பாலா

  பாலா - சூர்யா மோதலா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இயக்குனர் பாலா-சூர்யா இடையில் மோதல் என்று வெளியான வதந்திகளுக்கு அப்படக்குழு சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளது.
  சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதற்குமுன் இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது இவர்கள் மீண்டும் இணைவதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 41' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை '2டி என்டர்டைன்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கிறது. 

  பாலா
  பாலா

  இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே மோதல், இதனால் படப்பிடிப்பு தளத்திலிருந்து சூர்யா விலகியதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது போன்ற தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது. 

  பாலா - சூர்யா
  பாலா - சூர்யா

  இந்நிலையில் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 2டி நிறுவனம் பதிவிட்டுள்ளது. அதில், கன்னியாகுமரியில் 34 நாட்கள் நடைப்பெற்று வந்த 1வது ஷெட்யூல் வெற்றிகரமாக முடிந்த நிலையில், 'சூர்யா 41' அடுத்த கட்டத்திற்கு தயாராக உள்ளது. 15 நாட்கள் கொண்ட அடுத்த ஷெட்யூல் விரிவான செட் வேலைகளுக்குப் பிறகு ஜூன் மாதம் கோவாவில் தொடங்க உள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது. இணையத்தில் பரவிய வதந்திகளுக்கு ஒரு பதிவின் மூலம் அந்த நிறுவனம் இது முற்றிலும் பொய்யான தகவல் என்று வெளிப்படுத்தியுள்ளது.


  Next Story
  ×