என் மலர்

  சினிமா செய்திகள்

  யோகிபாபு
  X
  யோகிபாபு

  மீண்டும் ஷாருக்கான் படத்தில் யோகிபாபு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, பாலிவுட் படத்தில் நடித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
  2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரானார்.

  யோகிபாபு
  யோகிபாபு

  தற்போது இயக்குனர் அட்லீ பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார். ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புனேவில் நடைபெற்று வருகிறது. அட்லீ இயக்கும் பாலிவுட் படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. உறுதிபடாத இந்த தகவலை தற்போது யோகிபாபு ஒரு பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இப்படம் தொடர்பாக ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்து இப்படத்தில் ஷாருக்கானுடன் நடிப்பதை உறுதி செய்துள்ளார். 

  ஷாருக்கான் - யோகிபாபு
  ஷாருக்கான் - யோகிபாபு

  இப்படத்தில் நடிப்பதன் மூலம் யோகி பாபு பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார். ஏற்கனவே ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த யோகிபாபு தற்போது 2-வது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×