என் மலர்

  சினிமா செய்திகள்

  இயக்குனர் வராகி
  X
  இயக்குனர் வராகி

  இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்யுமாறு மிரட்டிய சினிமா தயாரிப்பாளர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருகம்பாக்கத்தில் வீடு புகுந்து இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்யுமாறு கட்டாயப்படுத்திய சினிமா தயாரிப்பாளர் கைது.
  விருகம்பாக்கம் நடேசன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சினிமா தயாரிப்பாளரும் இயக்குனருமான வராகி (46) வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் 31 வயதான இளம்பெண் ஒருவர் பெற்றோருடன் வசிக்கிறார். அந்த இளம்பெண் கடந்த 2016-ம் ஆண்டு வராகியிடம் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் அவரது நடவடிக்கை பிடிக்காமல் இளம்பெண் வேலையை விட்டு விலகியதாக தெரிகிறது. இந்த நிலையில் ஏற்கனவே திருமணமாக வராகி, அந்த இளம்பெண்ணிடம் தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று காலை இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்ற தயாரிப்பாளர் வாராகி இளம் பெண்ணிடம் “என்னை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்“ இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

  வராகி
  இயக்குனர் வராகி

  இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வடபழனி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
   இதைத்தொடர்ந்து இளம்பெண்ணை மிரட்டிய தயாரிப்பாளர் வராகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 5 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  Next Story
  ×