என் மலர்

  சினிமா செய்திகள்

  சூர்யா
  X
  சூர்யா

  அக்‌ஷய் குமாரை சந்தித்த சூர்யா - வைரலாகும் புகைப்படம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, அக்‌ஷய் குமாரை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
  சூர்யா நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இதில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

  சூரரைப்போற்று
  சூரரைப்போற்று

  தற்போது சூரரைப் போற்று திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். இதன் இந்தி பதிப்பையும் சுதா கொங்கரா தான் இயக்குகிறார். சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். இதனை சூர்யாவின் 2டி நிறுவனமும் அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர்.

  சூரரைப்போற்று
  சூரரைப்போற்று

  இந்நிலையில் சூர்யா, ‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக் பணிகளை பார்வையிடுவதற்காக மும்பைக்கு சென்றுள்ளார். நடிகர் அக்ஷய் குமார், இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் படக்குழுவினர்களை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். அந்த சந்திப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சூர்யா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


  Next Story
  ×