என் மலர்

  சினிமா செய்திகள்

  தர்ஷன் - லாஸ்லியா
  X
  தர்ஷன் - லாஸ்லியா

  தர்ஷன் - லாஸ்லியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான தர்ஷன், லாஸ்லியா இணைந்து நடித்து வெளிவரவிருக்கும் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
  மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. ‘கூகுள் குட்டப்பா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

  கூகுள் குட்டப்பா
  கூகுள் குட்டப்பா

  மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, பிராங்ஸ்டர் ராகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்கி உள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே மாதம் 6-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 
  Next Story
  ×