என் மலர்

  சினிமா செய்திகள்

  சமந்தா - விஜய் தேவரகொண்டா
  X
  சமந்தா - விஜய் தேவரகொண்டா

  சமந்தாவுடன் இணைந்த விஜய் தேவரகொண்டா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் தேவரகொண்டா நடித்து முடித்துள்ள லைகர் படத்தை தொடர்ந்து அவர் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
  தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 'லைகர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. 

  புதிய படம்
  புதிய படம் 

  இந்நிலையில் விஜய் தேவரகொண்டா அடுத்ததாக இயக்குனர் சிவ நிர்வாணா இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா இணைந்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பூஜை இன்று படக்குழுவுடன் தொடங்கியுள்ளது. படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 


  Next Story
  ×