என் மலர்

  சினிமா செய்திகள்

  பீஸ்ட் - விஜய்
  X
  பீஸ்ட் - விஜய்

  ரசிகர்களுடன் படம் பார்த்த பீஸ்ட் படக்குழு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் நடிப்பில் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தை ரசிகர்களுடன் படக்குழு பார்த்து ரசித்துள்ளனர்.
  நடிகர் விஜய் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. 

  பீஸ்ட் படக்குழு
  பீஸ்ட் படக்குழு

  அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அதிரடி சண்டை காட்சிகளுடன் வெளியான டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அனைவராலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. காலை முதலே திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் கட்அவுட் வைத்து மாலை அணிவித்து பாலபிஷேகம் செய்து மேளம் அடித்து கொண்டாடி வருகின்றனர்.

  பீஸ்ட் படக்குழு
  பீஸ்ட் படக்குழு

  இந்நிலையில் இப்படத்தை பார்ப்பதற்காக திரையரங்கிற்கு வந்த படக்குழு ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்து கொண்டாடினர். இதில் நெல்சன், பூஜா ஹெக்டே, அனிருத், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் ரசிகர்களுடன் படம் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×