என் மலர்

  சினிமா செய்திகள்

  கணேஷ் ஆச்சார்யா
  X
  கணேஷ் ஆச்சார்யா

  நடிகைக்கு பாலியல் தொல்லை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வில்லன் நடிகர் கணேஷ் ஆச்சார்யா வழக்கின் மீது மும்பை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
  இந்தி திரையுலகில் பிரபல நடன இயக்குனரான கணேஷ் ஆச்சார்யா, தமிழில் நடிகர் ஜீவாவின் ரவுத்திரம் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்திருந்தார்.

  கணேஷ் ஆச்சார்யா
  கணேஷ் ஆச்சார்யா

  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ் ஆச்சார்யா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடுமைப்படுத்துவதாக அவரது நடனக்குழுவில் பணிபுரிந்து வந்த 35 வயது நடன நடிகை மும்பை அம்போலி போலீஸ் நிலையத்திலும், பெண்கள் கமிஷனிலும் புகார் கொடுத்திருந்தார். அதன்பின் புகாரின் அடிப்படையில் கணேஷ் ஆச்சார்யா மீது மும்பை போலீசார் 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கணேஷ் ஆச்சார்யாவின் மீது பதியப்பட்ட இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையை அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மும்பை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
  Next Story
  ×