என் மலர்

  சினிமா செய்திகள்

  செல்ஃபி
  X
  செல்ஃபி

  செல்ஃபி திரைப்படத்தை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் நடிப்பில் உருவாகி வரும் செல்ஃபி படத்தை பா.மா.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமாதாஸ் பாராட்டியுள்ளார்.
  தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி வரும் ‘செல்ஃபி’ படத்தை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். 

  கல்லூரி மாணவராக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கவுதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாசுடன் கவுதம் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. இப்படத்தில் வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நீட் தேர்வை மையப்படுத்தி எடுப்பட்ட இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். 

  அன்புமணி ராமாதாஸ்
  அன்புமணி ராமாதாஸ்

  இப்படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த அன்புமணி ராமதாஸ் அப்படக்குழுவினர் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, நேற்று ‘செல்ஃபி’ படத்தின் முன்னோட்டத்தை பார்த்தேன். நீட் தொடர்பான மோசடிகள், தற்கொலைகள், கொலைகள் ஆகியவற்றை அம்பலப்படுத்தும் துணிச்சலான படம். ஜி.வி.பிரகாஷ், கவுதம் வாசுதேவ் மேனன், புதுமுக இயக்குனர் குணநிதி ஆகியோர் கலக்கியிருக்கிறார்கள். நான் பார்த்த ஜி.வி.பிரகாஷின் சிறந்த படங்களில் ஒன்று. கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் மதிமாறனுக்கு நன்றி!! என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.


  Next Story
  ×