என் மலர்

  சினிமா செய்திகள்

  பீஸ்ட் - விஜய்
  X
  பீஸ்ட் - விஜய்

  பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை சில தினங்களுக்கு முன்பு தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். பட தணிக்கை குழு உறுப்பினர்கள் அதைப்பார்த்து தற்போது ‘யுஏ’ சான்றிதழ் வழங்கி உள்ளனர். பீஸ்ட் படம் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் ஓடக்கூடியது என்று படத்தின் நீளத்துக்கான நேரத்தையும் தணிக்கை குழு வெளியிட்டு உள்ளது. 

  பீஸ்ட் படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது. 

  பீஸ்ட் - விஜய்
  பீஸ்ட் - விஜய்

  விஜய் அடுத்ததாக, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இது விஜய்க்கு 66-வது படம். தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்த படம் தயாராகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள இப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராயிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
  Next Story
  ×