search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கணவருடன் பிரியங்கா சோப்ரா
    X
    கணவருடன் பிரியங்கா சோப்ரா

    பிரியங்கா சோப்ராவின் ஹோலி கொண்டாட்டம்... வைரலாகும் வீடியோ

    பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவருடன் ஹோலி கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
    இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று அனைவரின் கவனத்தையும் பெற்றார். அதன்பின் தமிழில் விஜய் உடன் தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்த பிரியங்கா, பின்னர் பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றார். 

    பாப் பாடகர் நிக் ஜோனசை பிரியங்கா சோப்ரா மணந்து அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார். சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோன்ஸ் தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் குழந்தை ஒன்றை பெற்றடுத்து உள்ளனர். இந்நிலையில் ஹோலி பண்டிகையை பிரியங்கா சோப்ரா தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி இருக்கிறார்.

    நண்பர்களுடன் பிரியங்கா சோப்ரா

    கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.


    Next Story
    ×