என் மலர்

  சினிமா செய்திகள்

  அஜித்
  X
  அஜித்

  அஜித் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு... ரசிகர்கள் கொண்டாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் AK 62 படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
  எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை மீண்டும் எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  அஜித் - விக்னேஷ் சிவன்
  அஜித் - விக்னேஷ் சிவன்

  இந்த நிலையில் அஜித்தின் 62-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் அஜித்தின் 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்க இருக்கிறார்கள்.

  விக்னேஷ் சிவன் - அனிருத்
  விக்னேஷ் சிவன் - அனிருத்

  இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க இருப்பதாகவும், அடுத்தாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இப்படத்தை வெளியிட இருப்பதாகவும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
  Next Story
  ×