என் மலர்

  சினிமா செய்திகள்

  விஜய்
  X
  விஜய்

  பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் விஜய்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்கும் விதமான ரசிகர்கள் தங்கள் பகுதியில் செயல்படவேண்டும் என்று விஜய் உத்தரவின்படி மக்கள் இயக்கத்தினர் செயல்பட்டு இருக்கிறார்கள்.
  நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பின்னடைவை சந்தித்திருந்தாலும் சோர்வடையாமல் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையை மக்கள் பணியில் ஈடுபடுவதற்கென்றே செலவழிக்க வேண்டும் என்று தீர்மானமே கொண்டுவரப்பட்டது. 

  இதன் படி பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்கும் விதமான ரசிகர்கள் தங்கள் பகுதியில் செயல்படவேண்டும் என்று புஸ்ஸி ஆனந்து அறிவித்துள்ளார். 

  தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வாரம்தோறும் ஞாயிற்றுகிழமை அன்று மக்கள் இயக்கத்தின் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திட்டம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

  விஜய் மக்கள் இயக்கத்தினர்
  விஜய் மக்கள் இயக்கத்தினர்

  இதனை முன்னிட்டு விஜய் அவர்களின் உத்தரவின்படி, அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்து அவர்களின் ஆலோசனையின்படி அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்கப் பிரசாரம் செய்யப்பட்டு பொதுமக்களுக்குத் துணிப்பை வழங்கப்பட்டது.
  Next Story
  ×