என் மலர்

  சினிமா செய்திகள்

  அஜித்
  X
  அஜித்

  அஜித் அடுத்த படத்தின் தலைப்பு இதுவா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வலிமை படத்திற்கு பிறகு அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் தலைப்பு வைரலாகி வருகிறது.
  அஜித் நடித்த ’வலிமை’ படத்திற்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பைக் கொடுத்திருந்தாலும் சிலர் கடுமையாக விமர்சனத்தை வைத்திருந்தார்கள். படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறதென்று கருத்து முன் வைக்கப்பட்டது. இதனால் படம் வெளியான இரண்டாம் நாளே இருபது நிமிடங்கள் குறைக்கப்பட்டது. நல்ல வசூல் செய்திருந்தபோதும் படத்தைப் பற்றி எதிர்மறையான கருத்து ஏன் வருகிறது என்று அஜித் கண்காணிக்க ஆரம்பித்தார். அதன் குறைகள் எடுத்து வைக்கப்பட்டது. 

  அஜித்
  அஜித்

  இந்நிலையில் தனது அடுத்த படத்தை போனி கபூர் நிறுவனத்திற்கே நடிக்க இருக்கிறார். அந்தப் படத்தை வினோத் இயக்குகிறார். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஆந்திராவில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணாசாலை போல் பிரமாண்ட செட் போடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். படத்திற்குப் பாரதியாரின் கவிதைகளிலிருந்து 'வல்லமை' என்ற சொல்லை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த ஆண்டே ’வல்லமை’ படம் வெளியாகும் என்று அஜித் தரப்பில் கூறப்படுகிறது.

  Next Story
  ×