என் மலர்

  சினிமா செய்திகள்

  பூனம் பஜ்வா
  X
  பூனம் பஜ்வா

  பூனம் பஜ்வாவுடன் இணைந்த நடிகர் நட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் நட்டி அடுத்த படத்தில் நடிகை பூனம் பஜ்வாவுடன் இணைந்துள்ளார்.
  மிளகாய், சதுரங்க வேட்டை, எங்கிட்ட மோததே, போங்கு, சண்டி முனி, கர்ணன் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நட்டி (எ) நட்ராஜ். இவர் கடைசியாக நடித்த கர்ணன் திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவர் தற்போது சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை பூனம் பஜ்வாவுடன் சேர்ந்து புதிய படமொன்றில் நடித்துள்ளார்.

  பூனம் பஜ்வா - நட்டி
  பூனம் பஜ்வா - நட்டி

  குருமூர்த்தி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நட்டி பூனம் பஜ்வாவுடன் இணைந்து ராம்கி, மனோபாலா, ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா. சஞ்சனா சிங், ரிஷா ஜேகப்,ரேகா சுரேஷ், சம்யுக்தா, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.பி.தனசேகர் இப்படத்தை இயக்கியுள்ளார். பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சிவசலபதி, சாய் சரவணன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

  பூனம் பஜ்வா - நட்டி
  பூனம் பஜ்வா - நட்டி

  பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் இப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
  Next Story
  ×