என் மலர்

  சினிமா செய்திகள்

  விருது விழா
  X
  விருது விழா

  தேசிய சினிமா சேம்பர் சார்பில் திரைப்பட கலைஞர்களுக்கு விருது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேசிய சினிமா சேம்பர் சார்பில் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
  தேசிய சினிமா சேம்பர் சார்பில் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. மாண்புமிகு நீதியரசர், முனைவர் எஸ்.கே.கிருஷ்ணன் தலைமையில், கதை, திரைக்கதை, வசனம், இயக்குனர் கே.பாக்கியராஜ், தேசிய விருது பெற்ற திரைப்படஇயக்குனர், முனைவர் ஞான ராஜசேகரன் முன்னிலையில் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கினார்கள். 

  நடிகர், இயக்குனர் கே.பாக்கியராஜ் நேரமின்மையால் போக வேண்டியிருப்பதால் ஆரம்பத்திலேயே கே.பாக்யராஜுக்கு நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணன், முன்னிலை வகித்த திரைப்பட இயக்குனர் ஞான ராஜசேகரன் அனைவரும் இணைந்து விருது வழங்கி வாழ்த்தினோர்கள். 

  விருது விழா

  தொடர்ச்சியாக நடிகர்கள் சிறந்த நடிகர் ஜெய் ஆகாஸ், சிறந்த வில்லன் ஆரியன், சிறந்த குணசித்திர நடிகர் ரமேஷ் கண்ணா, வாழ்நாள் சாதனையாளர் பாபு கணேஷ், சிறந்த புதுமுக நடிகர் ரிஷி காந்த், நடிகைகள் சிறந்த கதாநாயகி சிறப்பு விருது இனியா, சிறந்த புதுமுக நாயகி அனுகிருஷ்ணா, மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களான சிறந்த திரைப்பட கம்பெனியான 2டி என்டர்டைன்மெண்ட் சார்பாக துணைத்தலைவர் மனோஜ் தாஸ், சிறந்த குடும்ப பட இயக்குனர் வி.சேகர், சிறந்த இசையமைப்பாளர் தீனா, சிறந்த எடிட்டர் கே.எல்.பிரவின், சிறந்த ஒளிப்பதிவாளர் கே.எஸ்.செல்வராஜ், "சிவப்பு மழை "கின்னஸ் சாதனை ஒளிப்பதிவாளர் எஸ்.ரவிமாறன் சிவன், சிறந்த கதாசிரியர் "கலைமாமணி "லியாகத் அலிகான், சிறந்த கதாசிரியர் சிறப்பு விருது வி.பிரபாகர், சிறந்த பின்னணி பாடகி ரெஹானா, சிறந்த ப்ரொடக் ஷன் கண்ட்ரோலர் சாமிநாதன், சிறந்த காஸ்ட்டிங் டைரக்டர் (SIFCDCMA) தாரா உமேஷ், சிறந்த மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு ஆகியோருக்கு விருது வழங்கி வாழ்த்தினார்கள்.
  Next Story
  ×