என் மலர்

  சினிமா செய்திகள்

  ஜெய்
  X
  ஜெய்

  பிகில் நடிகையுடன் ஆட்டம் போட்ட ஜெய்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வரும் ஜெய், பிகில் படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகையுடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
  விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் பீஸ்ட். நெல்சன் இயக்கி இருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் அரபிக் குத்து என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.

  இந்த பாடலில் அனிருத்தின் இசையும், சிவகார்த்திகேயனின் வரிகளும், விஜய்யின் நடனமும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இந்த பாடலுக்கு நடிகைகள் சமந்தா, சாக்‌ஷி அகர்வால், இயக்குனர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு இருந்தார்கள்.

  ஜெய் - அம்ரிதா
  ஜெய் - அம்ரிதா

  இந்நிலையில், நடிகர் ஜெய் பிகில் படத்தில் விஜய்யுடன் நடித்த அமிர்தாவுடன் இணைந்து அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


  Next Story
  ×