என் மலர்

  சினிமா செய்திகள்

  எம்.எஸ். தோனி - விக்னேஷ் சிவன்
  X
  எம்.எஸ். தோனி - விக்னேஷ் சிவன்

  தோனிக்கு 36 முறை ஆக்‌ஷன் சொன்னேன்.. விக்னேஷ் சிவனின் பதிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தோனியை வைத்து விக்னேஷ் சிவன் இயக்குவது குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
  சிம்பு நடிப்பில் வெளியான ”போடா போடி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதன்பிறகு நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கினார். இவர் தற்போது காத்துவாக்குல் ரெண்டு காதல் என்ற படத்தை நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கி வருகிறார். இதற்கிடையில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகின்றனர். 

  விக்னேஷ் சிவன் நேற்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஒரு புகைப்படம் அனைவரையும் முணுமுணுக்க வைத்தது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, “தோனியை ஆக்‌ஷன் சொல்லி, அவரை இயக்குவது பற்றிய ஒரு நல்ல கதை விரைவில் வரும்” என்று குறிப்பிட்டிருந்தார். 

  விக்னேஷ் சிவன் - எம்.எஸ். தோனி
  விக்னேஷ் சிவன் - எம்.எஸ். தோனி

  தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு சின்ன புரோமோ வீடியோவை இயக்கி வருகிறார். தோனியை வைத்து இயக்குவது பற்றி அவர் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். அதில், மொத்தம் 36 முறை தோனிக்கு ஆக்‌ஷன் சொன்னேன். அதை ஒவ்வொரு முறையும் சிறு குழந்தைபோல விரலால் எண்ணிக்கொண்டு இருந்தேன் என்று நீண்ட பதிவின் மூலம் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார். 


  Next Story
  ×