என் மலர்

  சினிமா செய்திகள்

  குக் வித் கோமாளி புகழ்
  X
  குக் வித் கோமாளி புகழ்

  திருமணத்தை பற்றி பகிர்ந்து கொண்ட 'குக் வித் கோமாளி' புகழ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான புகழ் அவரின் திருமணத்தை குறித்து பகிர்ந்துள்ளார்.
  'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது பெரியத்திரையில் நடிக்க தொடங்கி இருக்கிறார். சந்தானத்துடன் சபாபதி, அஜித்தின் வலிமை, அருண் விஜய்யின் யானை, அஸ்வினுடன் என்ன சொல்ல போகிறாய் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

  குக் வித் கோமாளி புகழ் - பென்சி
  குக் வித் கோமாளி புகழ் - பென்சி

  அதன்பிறகு பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 3-க்கான புரோமோ வெளியானது. அதில் புகழ் இடம்பெறாதது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் குக் வித் கோமாளி எபிசோட்டில் புகழ் அவருடைய காதலி குறித்து பேசியுள்ளது வைரலாக பரவிவருகிறது. அதில் “5 வருடமாக நாங்கள் காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கப்போவது யாரு ஆடிஷன் போகும்போதில் இருந்தே தெரியும். அவர் பெயர் பென்சி, குக் வித் கோமாளியில் பவித்ரா, தர்ஷாவுடன் நான் செய்த அட்காசங்கள், லூட்டிகளை பார்த்து இப்படியே செய், ஆடியன்ஸ் அதை தான் எதிர்பார்க்கிறார்கள். நான் தப்பா எடுத்துக்கமாட்டேன் என முழு நம்பிக்கையுடன் பேசினார். இந்த வருடம் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம்” என புகழ் தெரிவித்துள்ளார்.  
  Next Story
  ×