என் மலர்

  சினிமா செய்திகள்

  சூர்யா
  X
  சூர்யா

  தெலுங்கில் டப்பிங் பேசிய சூர்யா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெய்பீம் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக நடித்து வரும் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார்.
  இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. கொரோனா பாதிப்பினால் தள்ளிப்போன எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தற்போது வருகிற மார்ச் மாதம் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளன.

  இந்த நிலையில் நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் தன் சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார். இந்த திரைப்படத்தை தயாரித்துள்ள சன்பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர் சூர்யா தெலுங்கு பதிப்பிற்கு டப்பிங் பேசும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இதை தெரிவித்துள்ளது.

  டப்பிங் பேசிய சூர்யா
  டப்பிங் பேசிய சூர்யா 

  கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் சத்தியராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவ தர்ஷினி, ஜெயபிரகாஷ், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார்.


  Next Story
  ×