என் மலர்

  சினிமா செய்திகள்

  சஞ்சய்
  X
  சஞ்சய்

  விஜய் மகனுடன் இணைய தயார்.. பிரபல நடிகர் ஆர்வம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர், விஜய் மகனுடம் இணைய தயாராக இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
  2019-இல் வெளியான ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் துருவ் விக்ரம். நடிகர் விக்ரமின் மகனான இவர், முதல் படத்திலேயே பல ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய மகான் படத்தில் அவருடைய தந்தை விக்ரமுடன் இணைந்து நடித்தார். இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

  துருவ் விக்ரம்
  துருவ் விக்ரம்

  இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் துருவ் விக்ரம் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, "சிறு வயதிலிருந்தே நானும் விஜய் சாருடைய மகன் சஞ்சய்யும் நல்ல நண்பர்கள், அவர் நல்ல கதையுடன் வந்தால் அந்த படத்தில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். மேலும் அந்தப்படம் பாலிவுட் படங்களை போல இரண்டு நாயகர்களின் வாரிசுகள் இணையும் படமாக அது இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 
  Next Story
  ×