என் மலர்

  சினிமா செய்திகள்

  அசோக் செல்வன்
  X
  அசோக் செல்வன்

  லிப் கிஸ் - ஆங்கில படத்தை மிஞ்சும் அசோக் செல்வன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அசோக் செல்வனின் அடுத்த படமான மன்மதலீலை படத்தின் டீசர் ஆங்கில படத்தை மிஞ்சும் அளவிற்கு இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
  சூதுகவ்வும், தெகிடி, கூட்டத்தில் ஒருவன், ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அசோக் செல்வன். இவரின் அடுத்த படத்தை சென்னை 28, மங்காத்தா, மாநாடு போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்திற்கு மன்மதலீலை என்று பெயரிடப்பட்டுள்ளது. சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரேம்ஜி இசையமைக்கும் இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

  மன்மதலீலை
  மன்மதலீலை

  சமீபத்தில் மன்மதலீலை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக மாறியது. இந்நிலையில் இப்படத்தின் சின்ன கிளிம்ஸை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் கதாநாயகிகளுக்கு அசோக் செல்வன் முத்த மழையை பொழிகிறார். இந்த கிளிம்ஸில் இடம் பெற்றுள்ள காட்சி ஆங்கில படத்தை மிஞ்சும் அளவிற்கு உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  


  Next Story
  ×