என் மலர்

  சினிமா செய்திகள்

  டி.பி.கஜேந்திரன்
  X
  டி.பி.கஜேந்திரன்

  இயக்குனர் டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரும் பிரபல நடிகருமான டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொற்று உறுதியாகியுள்ளது.
  தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் முக்கிய பிரமுகர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  டி.பி.கஜேந்திரன்
  டி.பி.கஜேந்திரன்

  அவ்வகையில், பிரபல  இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு மூச்சுத்திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கஜேந்திரன் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
  Next Story
  ×