என் மலர்

  சினிமா செய்திகள்

  பா.இரஞ்சித்
  X
  பா.இரஞ்சித்

  அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பா.இரஞ்சித்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கி வரும் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
  அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இதனைத் தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வந்தது.

  'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். 

  நட்சத்திரம் நகர்கிறது படக்குழு
  நட்சத்திரம் நகர்கிறது படக்குழு

  நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இரண்டாம் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார். 

  இந்நிலையில் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை, படப்பிடிப்பின் இறுதி நாளில் கேக் வெட்டி படக்குழு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை நீலம் புரொடக்சன்ஸ் தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டு இதை அறிவித்துள்ளது.
  Next Story
  ×