என் மலர்

  சினிமா செய்திகள்

  சீனு ராமசாமி
  X
  சீனு ராமசாமி

  ஓடிடி-யை குற்றம்சாட்டிய இயக்குனர் சீனு ராமசாமி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவிற்கு நடிகர் விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமி ஓடிடி-யை குற்றம்சாட்டி பதிவிட்டுள்ளார்.
  கொரோனா காலக்கட்டத்தில் திரையரங்குகள் மூட்டப்பட்ட நிலையில் ஓடிடி நிறுவனங்கள் அதனுடைய பணியை சிறப்பாக செய்து வந்தது. திரையரங்குகளின் ரசிகர்களை போன்றே ஓடிடி-யில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகரித்து வந்தனர். சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக ஓடிடி இன்று வளர்ந்திருக்கின்றன. ஓடிடி-யை நம்பி படங்கள் எடுக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. 

  தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் ஒருவரான சீனு ராமசாமி ஓடிடி நிறுவனங்கள் மீது ஆதங்கத்தோடு ஒரு குற்றச்சாட்டை அவருடைய சமூக வலைத்தளத்தல் பக்கத்தில் முன் வைத்துள்ளார். "சொன்ன தேதியை விட திரைப்படத்தை சற்றுத் தள்ளி வெளியிட்டால் தந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி வசூலிக்கின்றன சில ஓடிடி நிறுவனங்கள். கதைக்கு முக்கியத்துவம் தரும் தயாரிப்பாளர்கள் வளர்ந்தால் தானே ஓடிடி நிறுவனங்களுக்கு பெருமை, கதை படங்கள் வளரும். புதியவர்கள் தழைப்பர்.." எனும் குற்றச்சாட்டு தான் அது.

  சீனு ராமசாமி

  இந்த பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.
  Next Story
  ×