என் மலர்

  சினிமா செய்திகள்

  நடிகர் ஜான் ஆபிரகாம்
  X
  நடிகர் ஜான் ஆபிரகாம்

  மனைவியுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அவரது மனைவி பிரியா ரன்சாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  பிரபல இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம். இவரது மனைவி பிரியா ரன்சால்.

  இந்த நிலையில் ஜான் ஆபிரகாமுக்கும், அவரது மனைவி பிரியா ரன்சாலுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ஜான் ஆபிரகாம் கூறி இருப்பதாவது:-

  கடந்த 3 தினங்களுக்கு முன்பு கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தேன். இதைத் தொடர்ந்து நானும், எனது மனைவியும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டோம். எங்கள் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.

  மனைவியுடன் ஜான் ஆபிரகாம்.
  மனைவியுடன் ஜான் ஆபிரகாம்

  நாங்கள் இருவரும் வீட்டில் தனிமையில் உள்ளோம். எங்களுக்கு லேசான அறிகுறிகள் தான் இருக்கிறது. நானும், எனது மனைவியும் தடுப்பூசி போட்டுள்ளோம். நாங்கள் இதுவரை யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். முகக்கவசம் அணியுங்கள்.

  இவ்வாறு ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×