search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    குஷ்பு
    X
    குஷ்பு

    திருமணம் செய்ய விரும்புவதாக கமெண்ட் செய்த ரசிகருக்கு குஷ்பு கொடுத்த நச் பதில்

    வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்ததை போல தற்போது அரசியலிலும் படு பிசியாக செயல்பட்டு வருகிறார் குஷ்பு.
    உடல் எடையை குறைத்து இளமையான தோற்றத்திற்கு மாறியுள்ள குஷ்பு, மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக் வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.

    இந்நிலையில், ரசிகர் ஒருவர் டுவிட்டரில், நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் மேடம் என்று கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த குஷ்பு, “நீங்க ஒரு 21 வருஷம் லேட்டா வந்து இப்படியொரு கேள்வி கேட்டிருக்கீங்க. ஆனாலும், கவலைப்படாதீங்க என் கணவரிடம் ஒரு வார்த்தை இதைப் பற்றி பேசி விட்டு சொல்கிறேன்” என நக்கலாக பதிவிட்டிருந்தார்.

    குஷ்புவின் டுவிட்டர் பதிவு
    குஷ்புவின் டுவிட்டர் பதிவு

    மற்றொரு ரசிகர், உங்கள் கணவர் ஏதாவது பதில் அளித்தாரா என்று கேட்க, அதற்கு “துரதிர்ஷ்டவசமாக நான் அவருடைய ஒரே மனைவி. அதனால் அவர் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை, மன்னிக்கவும்” என குஷ்பு பதிலளித்துள்ளார்.
    Next Story
    ×