என் மலர்

  சினிமா

  தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
  X

  தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமீபத்தில் தீபிகாவை திருமணம் செய்துக் கொண்ட ரன்வீர் சிங், தற்போது ஒரு விழாவில் அவரைப் பற்றி பேசி கண் கலங்க வைத்துள்ளார். #DeepikaPadukone
  மும்பையில் ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகள் சார்பாக ‘பத்மாவத்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருது ரன்வீர் சிங்குக்கு வழங்கப்பட்டது. விழாவுக்கு ரன்வீரும் தீபிகா படுகோனும் வந்திருந்தனர். திருமணத்துக்கு பின்னர் இருவரும் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால் ரன்வீரின் பேச்சை கேட்க ரசிகர்கள் காத்திருந்தனர். 

  அப்போது பேசிய ரன்வீர், ‘’என்னுடைய ராணி ‘பத்மாவத்’ படத்தில் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் என் ராணியை அடைந்துவிட்டேன். உன்னை நேசிக்கிறேன் தீபிகா. இந்த ஆறு வருடத்தில் நான் எதையாவது சாதித்திருந்தால் அதற்கு நீதான் காரணம்.   என்னைச் செதுக்கியது நீதான். எனக்கு நீ அளித்த எல்லாவற்றுக்கும் நன்றி. ஐ லவ் யூ தீபிகா’’ என்றார். இதைக் கேட்ட தீபிகா கண் கலங்கினார். கண்ணீர்த் துளிகள் உருண்டு கன்னத்தில் விழுந்தன. எனினும் கண்களில் நிறைந்த நீருடன் சமாளித்துக் கொண்டு சிரித்தார் தீபிகா. இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
  Next Story
  ×