என் மலர்

  சினிமா

  இந்தியன் 2-வில் கமலுக்கு ஜோடி இவரா?
  X

  இந்தியன் 2-வில் கமலுக்கு ஜோடி இவரா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகையிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Kamal #Indian2
  சங்கர் அடுத்து கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ படத்தை இயக்க இருக்கிறார். கமல் இரு வேடங்களில் நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக இருக்கிறது. முந்தைய பாகத்தை போலவே கமல் இதில் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார். 

  படத்திற்காக தனது உடல் எடையை குறைக்கும் வேலையில் இறங்கி உள்ளார். இதில் கமலுக்கு ஜோடியாக நடிக்க முதலில் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் நயன்தாரா சில நிபந்தனைகள் விதித்ததாக செய்திகள் வெளியாகின. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வரும் நயன்தாரா படத்தில் தனக்கு போதிய முக்கியத்துவம் இருக்காது என்று எண்ணி மறுத்துவிட்டார் என்கிறார்கள்.   தற்போதைய தகவல்படி ‘இந்தியன் 2’வில் நடிக்க காஜல் அகர்வாலுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். தென்னிந்திய மொழியின் முன்னணி நடிகர்களில் ரஜினி, கமல் தவிர மற்றவர்களுடன் காஜல் நடித்துவிட்டார். இப்போது கமலுடனும் நடிக்க இருக்கிறார்.
  Next Story
  ×