என் மலர்

  சினிமா

  சர்கார் ரிலீஸ் தேதியை உறுதி செய்தது சன் பிக்சர்ஸ்
  X

  சர்கார் ரிலீஸ் தேதியை உறுதி செய்தது சன் பிக்சர்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் சர்கார் படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. #Sarkar #Vijay
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளி பண்டிகையான வருகிற நவம்பர் 6-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். 

  தமிழ்நாடு முழுவதும் அதிகமான தியேட்டர்களை ‘சர்கார்’ படத்துக்கு ஒதுக்கி உள்ளனர். ரசிகர்களும் தீபாவளியை சர்கார் படத்தோடு கொண்டாட பேனர்கள், சுவரொட்டிகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

  இந்த நிலையில் தீபாவளிக்கு முன்னதாக வருகிற 2-ந் தேதி ‘சர்கார்’ படத்தை திரைக்கு கொண்டு வருவது குறித்து படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியானது. 2-ந் தேதி வெள்ளிக்கிழமை என்பதாலும் தொடர்ந்து விடுமுறையாக இருப்பதாலும் முன்னதாக படத்தை வெளியிட திட்டமிடுவதாக கூறப்பட்டது.

  ஆனால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் சர்கார் திரைப்படம் நவம்பர் 6ம் தேதி தீபாவளி அன்று வெளியாகும் என்று உறுதி செய்துள்ளது. #Sarkar #Vijay


  Next Story
  ×