என் மலர்
சினிமா

இன்று மாலை ஒரு விரல் புரட்சியை ஆரம்பிக்கும் விஜய்
நடிகர் விஜய் ‘ஒரு விரல் புரட்சி’ - யை இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். #Vijay #Sarkar #SarkarKondattam
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்'. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான முதல் சிங்கிள் `சிம்டாங்காரன்' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது இரண்டாவது சிங்கிள் ‘ஒரு விரல் புரட்சி’ என்ற பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
The second single from #Sarkar - #Oruviralpuratchi will be released today at 6pm! #Sarkarkondattam#Sarkarsecondsinglepic.twitter.com/WNMUGlzmNX
— Sun Pictures (@sunpictures) September 30, 2018
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #Sarkar #Vijay #SarkarKondattam
Next Story